சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், கிரானைட் ஊழல்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியதுடன், பல மலைகள் குவாரிகளால் அழிந்து போவதிலிருந்தும் தடுத்தார். அந்த வழக்கு விசாரணையில் சகாயம் ஆஜராகாத நிலையில், அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் வர இயலவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்கள் அளிக்க ஏதுவாக அவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பின் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
The post ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.