ஜிஹெச்சிற்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க கோரிக்கை

காரைக்குடி, மே 3: காரைக்குடி சூரக்குடி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்கி மருத்துவமனைக்கு செல்ல போதிய அளவில் டவுன்பஸ் இல்லாததால் ரூ 300 கொடுத்து ஆட்டோ பிடித்த செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த பகுதிக்கு கூடுதலாக டவுன்பஸ் இயக்கப்படும் பட்சத்தில், பாண்டியன் நகர், கேவிஎஸ் நகர், கே.கே. நகர், கம்பன் நகர், மாருதி நகர், விஏஓ காலனி, தாசில்தார் நகர், ஹவுசிங் போர்டு, காவலர் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிமக்களுக்கு பெரும் பயனாக அமையும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post ஜிஹெச்சிற்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: