* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: இந்த அணி 10 போட்டிகளில் ஆடி 7ல் வென்று, 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு நெருங்கி விட்ட அணியாக கருதப்படும் பெங்களூரு, முதல் இரு இடங்களில் ஒன்றை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அவற்றில் 2ல் வென்றால் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் பெங்களூரு வந்து விடும்.
* மும்பை இந்தியன்ஸ்: மும்பை அணி, 10 போட்டிகளில் ஆடி 6ல் வென்று, 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2ம் இடத்தை பெற்றுள்ளது. இதன் ரன் ரேட் விகிதமும் சாதகமான அம்சமாக உள்ளது. இந்த அணி, கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று தன் வல்லமையை நிரூபித்து வருகிறது. மீதமுள்ள 4 போட்டிகளில் 3ல் வென்றால், பட்டியலில் முதல் 4 இடங்களில் ஒன்றை மும்பை பிடிக்கும்.
* குஜராத் டைடன்ஸ்: குஜராத் அணி, 9 போட்டிகளில் ஆடி 6ல் வென்றுள்ளது. 12 புள்ளிகளுடன் பட்டியலில் 3ம் இடத்தை வகித்து வருகிறது. மீதமுள்ள 5 போட்டிகளில் 2ல் வென்றால் கூட, டாப் 4ல் ஒரு இடம் பெறலாம். 3ல் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறலாம்.
* டெல்லி கேபிடல்ஸ்: டெல்லி அணி, 10 போட்டிகளில் ஆடி 6ல் வென்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 6 போட்டிகளில் 4ல் தோல்வியை தழுவி தற்போது, மோசமான ஃபார்மில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தபட்சம் 2ல் வென்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யலாம்.
* பஞ்சாப் கிங்ஸ்: 9 போட்டிகளில் ஆடி (சென்னையுடன் நேற்று நடந்த போட்டி நீங்கலாக) 5ல் வென்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் 5ம் இடத்தில் பஞ்சாப் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் 3ல் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் பஞ்சாப் உள்ளது. அதிக ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றால் 2ல் வென்றால் கூட போதுமானது.
* லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: இந்த அணி, 10 போட்டிகளில் ஆடி 5ல் வென்று 10 புள்ளிகள் பெற்று 6ம் இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் 3ல் அதிக ரன் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
* கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இந்த அணி 10 போட்டிகளில் ஆடி 4ல் வென்று (ஒரு போட்டி டை), 9 புள்ளிகளுடன் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.
* ராஜஸ்தான் ராயல்ஸ்: இந்த அணி 10 போட்டிகளில் ஆடி 3ல் மட்டுமே வென்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 8ம் இடத்தை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் வென்று, பட்டியலில் தனக்கு மேலே உள்ள அணிகள் தோல்வியை தழுவும் பட்சத்தில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
* சன்ரைசர்ஸ ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரை வியப்பில் ஆழ்த்திய அணியான சன்ரைசர்ஸ் அதன் பின் தோல்விகளை தழுவியது. 9 போட்டிகளில் ஆடி 3ல் மட்டுமே வென்றுள்ள சன்ரைசர்ஸ், 6 புள்ளிகளுடன் பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளிலும் வென்று, தனக்கு மேல் உள்ள அணிகள் தோற்கும் பட்சத்தில் சன்ரைசர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம்.
* சென்னை சூப்பர் கிங்ஸ்: 9 போட்டிகளில் ஆடி (பஞ்சாபுடன் நேற்று நடந்த போட்டி நீங்கலாக) 2ல் மட்டுமே வென்றுள்ள சென்னை அணிக்கு, அநேகமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு துளியும் இல்லை. மீதமுள்ள 5 போட்டிகளில் வென்றாலும், அதன் ரன் ரேட் மிக மோசமானதாக உள்ளது. எனவே, டாப் 4க்குள் நுழைவது சென்னை அணிக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.
The post பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய யாருக்கு வாய்ப்பு? கடைசி நேரத்தில் அதிரடி காட்டும் அணிகள் appeared first on Dinakaran.