50வது லீக் போட்டியில் இன்று வெற்றிக் களிப்பில் மும்பை தோல்வி பரிதவிப்பில் ஆர்ஆர்

* ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
* ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் மும்பை 15, ராஜஸ்தான் 14 போட்டிகளில் வெற்றிப் பெற எஞ்சிய ஒரு ஆட்டம் ரத்தானது.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக மும்பை 214, ராஜஸ்தான் 212 ரன் குவித்துள்ளன.
* குறைந்தபட்சமாக மும்பை 92, ராஜஸ்தான் 90 ரன் எடுத்துள்ளன.
* இந்த 2 அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் 3-2 என்ற கணக்கில் வெற்றி தோல்விகளை பெற்று முன்னிலையில் இருக்கிறது.
* மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் மும்பை 5 போட்டிகளிலும் தொடர்ந்து வென்றுள்ளது.
* ராஜஸ்தான் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்து பரிதாப நிலையில் உள்ளது.
* நடப்புத் தொடரில் ரியான் பராக் தலைமையில் ராஜஸ்தான் 9 ஆட்டங்களில் விளையாடி 2ல் வெற்றியும், 7ல் தோல்வியும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது.
* ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்த தொடரில் முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றது. ஆனால் அடுத்த 5 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியது. அந்த அதிசயத்தில் 10 ஆட்டங்களில் 6ல் வெற்றிப் பெற்று பிளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது இந்த 5 முறை சாம்பியன்.
* ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் அரங்கில் இவ்விரு அணிகளும் 7 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் ராஜஸ்தான் 5, மும்பை 2 போட்டிகளில் வென்று இருக்கின்றன.

The post 50வது லீக் போட்டியில் இன்று வெற்றிக் களிப்பில் மும்பை தோல்வி பரிதவிப்பில் ஆர்ஆர் appeared first on Dinakaran.

Related Stories: