கீவ்: ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை எட்டுவது விரைவாக செய்ய முடியாதபடி சிக்கலானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை முடங்கி உள்ள நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது. உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது நேற்று முன்தினம் இரவு ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் சுமார் 45 பேர் காயமடைந்தனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரில் உக்ரைன் பொதுமக்களின் உயிரிழப்பானது சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘‘அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன் போர் நிறுத்தம் தேவை என்ற கோரிக்கையை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரிக்கிறார்.
ஆனால் அதற்கு முன் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சில நுணுக்கங்களை வரிசைப்படுத்துவதும் அவசியமாகும். அமெரிக்கா விரைவாக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு விரும்புகிறது என்பதை உணர்கிறோம். ஆனால் உக்ரைன் நெருக்கடிக்கான தீர்வு விரைவாக செய்ய முடியாத அளவுக்கு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு தீர்வுக்கு முன்னதாக தீர்க்கப்படவேண்டிய பல விவரங்களும், சிறிய நுணுக்கங்களும் உள்ளன” என்றார்.
The post உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை விரைவாக அடைய முடியாது: ரஷ்யா திட்டவட்டம் appeared first on Dinakaran.