இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 13 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘நமது நாட்டின் நலன் என்பது மிகவும் முக்கியம் ஆகும். எனவே அதற்கு எதிரான செயல்படும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் தேவை ஆகும். அதுகுறித்து அரசு எடுப்பது எப்படி சட்டவிரோதம் ஆகும். அதே நேரத்தில் தனி நபர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதை இந்த நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டு, உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்துவோம்.
மேலும் ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட குழு தங்களது அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது. ஆனால் அதை எந்த அளவிற்கு பொதுவெளியில் வெளியிட முடியும் என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் . குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சம்பந்தமான விவகாரங்கள் தொடர்புடைய அறிக்கைகள் என்பதால் பொதுவெளியில் கொடுக்க சாத்தியக்கூறுகள் குறைவு தான் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
The post தனிமனித உரிமை பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக தலையிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.