வயநாடு: வயநாடு மாவட்டம் குறிச்சியாடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த வெள்ளை மான் வீடியோ, வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை காகம் நாகம் பார்த்திருக்கிறோம் என் வெள்ளை யானை இருப்பதாக கூட கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் முதன்முறையாக வெள்ளை மான் ஒன்று வனப்பகுதியில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் வயநாடு குறிச்சியாடு வனப்பகுதியில் இந்த வெள்ளை மான் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
https://youtube.com/shorts/hb0bb3POSIU?si=4f3YOv2B_CE37BKh
வனப்பகுதியில் வெள்ளை உருவத்தோடு ஆடு போல் தென்பட்ட அந்தமான் வனப்பகுதியில் சுற்றி திரிந்தது. அப்போது அச்சாலை வழியாக சென்றவர்கள் அதை ஆடு என நினைத்து தான் வீடியோ எடுத்தனர். திடீரென அந்த வெள்ளை உருவம் அருகில் வந்தவுடன் பார்த்தபோது அது வெள்ளை மான் என தெரிந்தது. வனப்பகுதிகளில் புள்ளிமான் கடமான் குறைக்கும் மான் என ஏராளமான மான் வகைகள் உள்ளன.
ஆனால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முதன்முறையாக தென்பட்ட இந்த வெள்ளை நிற மான் வனப்பகுதியில் சுற்றித் திரிவது வனத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களிடேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மான் வனப்பகுதிக்குள் சுற்றி தெரியும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
The post வனப்பகுதியில் சுற்றித்திரிந்த வெள்ளை மான்: வயநாடு அருகே ஆச்சரியம் appeared first on Dinakaran.