பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி பிரபல பாடகி மீது தேசதுரோக வழக்கு: உபி அரசு அதிரடி

லக்னோ: பீகார் மாநிலத்தை சேர்ந்தவரும், பிரபல நாட்டுப்புற பாடகியுமான நேஹாசிங் ரத்தோர், பஹல்காம் தாக்குதல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் அபய்பிரதாப் சிங் என்பவர் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது தேசதுரோக வழக்கு உள்பட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி பாடகி நேஹாசிங் ரத்தோர் கூறுகையில்,’ தைரியம் இருந்தால், தீவிரவாதிகளின் தலைகளை கொண்டு வாருங்கள்’ என்றார்.

 

The post பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி பிரபல பாடகி மீது தேசதுரோக வழக்கு: உபி அரசு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: