திருச்சி ரயில் நிலையத்தில் நாசவேலை தடுப்பு சோதனை

திருச்சி, ஏப்.28:திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வர ராவ் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய்குமார் தலைமையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நேற்று திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர் இணைந்து திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

The post திருச்சி ரயில் நிலையத்தில் நாசவேலை தடுப்பு சோதனை appeared first on Dinakaran.

Related Stories: