திருச்சி மாரிஸ் தியேட்டர் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்

திருச்சி, ஏப்.28: தமிழ்நாடு உபயோகிப்பாளர் குழுவின் வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் 2025-27ம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சி ஒய்டபிள்யுசிஏ-வில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழுத்தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குழுவின் மூத்த உறுப்பினரான சுப்ரமணியபுரம் கோபாலகிருஷ்ணன் (105) மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குழு செயலாளர் பேராசிரியர் புஷ்பவனம் ஆண்டறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து 2025-27ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், தலைவராக செல்வகுமார் துணை தலைவராக சேகர், செயலாளராக பேராசிரியர் புஷ்பவனம், இணைச் செயலாளராக லட்சுமி, பொருளாளராக மொஹமட் ஈசாக் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக, ரவீந்திரன், சந்திர சேகரன், வெங்கடராமன், ஜெயராமன், ரபீந்திரன், உப்பிலி கோதண்டராமன் மற்றும் வைத்தீஸ்வரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த ஆண்டுக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கல்லூரிகளுக்கு உள்ளது போன்று பள்ளிக்கூடங்களின் தரத்தை ஆய்வு செய்து அறிவிக்க, ஒன்றிய மாநில அரசுகளின் உதவியோடு சுதந்திரமான தன்னாட்சி பெற்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகளை தேர்வு செய்ய இத்திட்டம் பயனளிக்கும். மேலும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், இத்தரவரிசை உதவியாக இருக்கும். ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் திருச்சி மாரிஸ் தியேட்டர் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை (சாலை ரோடு) பொது மக்கள் நலன் கருதி விரைவில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஓய்வு பெற்ற மின்சார வாரிய துணை முதன்மை பொறியாளர் வெங்கடராமன் வரவேற்றார். பேராசிரியர் ராஜா முத்திருளாண்டி, னிவாசன், ரங்காச்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லட்சுமி நன்றி தெரிவித்தார்.

The post திருச்சி மாரிஸ் தியேட்டர் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: