தற்போது புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்க வேண்டும் என மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை (28-04-2025) முதல் ஜூன் 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் (02.6.2025) தேதி முதல் வழக்கம் போல் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.
The post புதுச்சேரியில் நாளை ஜூன் 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.