ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

கீழ்பென்னாத்தூர், ஏப். 27: கீழ்பென்னாத்தூரில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று மாலை நடக்கிறது. நிகழும் மங்களகரமான விசுவாவசு ஆண்டு சித்திரைத் திங்கள் 13ம் நாள் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு ராகுபகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். விழாவை முன்னிட்டு நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, நவக்கிர ஹோமம் நடக்கிறது. முன்னதாக மதியம் 2.30 மணிக்கு சங்கல்பம், மாலை 3.00 மணியளவில் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், தொடர்ந்து கடம் புறப்பாடு, மாலை 4 மணிக்கு கலசாபிேஷகம், 4:20 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் ஏகாம்பர ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியொட்டி ராகு, கேது சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

The post ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: