சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில் சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிப்பதே சிம்லா ஒப்பந்தமாகும். சிம்லா ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதால் அசல் கட்டுப்பாட்டு கோட்டை எல்லையில் அந்நாட்டு ராணுவம் மீற வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயங்கரவாத கும்பலின் துப்பாக்கி தாக்குதலில், அங்கு சுற்றுலாவுக்கு சென்றிருந்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலை தொடர்ந்து வாகா-அட்டாரி எல்லையை உடனடியாக மூட உத்தரவிட்ட இந்திய அரசு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்டது. மேலும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் 1 வாரத்தில் இந்தியாவில் வெளியேற உத்தரவிட்டதுடன் சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கும் உரிமையை பயன்படுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்தியா உடனான வர்த்தகத்துக்கும் முழுமையாக தடை விதித்ததுடன் வாகா எல்லை வழியாக அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்குள் பாயும் நதிநீரை இந்தியா தடுத்தால் அதனை போர் நடவடிக்கையாக கருதி பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிப்பதே சிம்லா ஒப்பந்தமாகும். சிம்லா ஒப்பந்தம் ரத்து என பாகிஸ்தான் அறிவித்துள்ளதால் அசல் கட்டுப்பாட்டு கோட்டை எல்லையில் அந்நாட்டு ராணுவம் மீற வாய்ப்புள்ளது.

The post சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: