சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான அதிநவீன உயர்தர வலி நீக்கும் இயன்முறை மருத்துவ கருவிகளை முட நீக்கியல் துறை இயக்குனர் மருத்துவர் சிங்கார வடிவேலு தலைமையில் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மருத்துவ கருவிகள் குறித்து மருத்துவர் சிங்கார வடிவேலு கூறியதாவது: 4 லட்சம் மதிப்புள்ள 2 இழுவை சிகிச்சை கருவிகள் உள்பட அதிநவீன உயர்தர வலிநீக்கும் கருவிகள், உள் மற்றும் வெளி நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மருத்துவ கருவிகள் மூலம் எலும்பு, மூட்டு, தசை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வலியால் பாதிக்கப்படும் நோயாளிகள் பயன்பெறுவார்கள். தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலி நீக்கும் இயன்முறை மருத்துவ கருவிகள் பயன்பாடு: தேரணிராஜன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.