திருவிக நகர் தொகுதி வார்டு எண் 71ல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: சட்டசபையில் தாயகம் கவி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் ேபாது திரு.வி.க. நகர் தாயகம் கவி (திமுக) பேசுகையில், “திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, வார்டு எண் 71ல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை அமைத்துத் தர அரசு முன்வருமா?” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழ்நாடு முதல்வர், 708 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று விதி 110ன்கீழ் அறிவித்து, 500 மருத்துவமனைகளை திறந்து வைத்திருக்கிறார். மேலும், 208 மருத்துவமனைகள் முழுமைப்பெற்று திறக்கும் தருவாயில் இருக்கின்றன.

ெசன்னையைப் பொறுத்தவரை, 200 வார்டுகளிலும், வார்டுக்கு ஒன்று வீதம் இன்றைக்கு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 140 இடங்களில் திறந்து வைக்கப்பட்டன. மீதமுள்ள 60 இடங்களிலும் மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உறுப்பினர் தாயகம் கவி சொன்ன வார்டில் இந்த மருத்துவமனை அமையாமல் இருந்தால், அவர் உரிய இடத்தை காட்டினால், நாளையே அந்த மருத்துவமனை அங்கு அமைவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்படும்” என்றார்.

The post திருவிக நகர் தொகுதி வார்டு எண் 71ல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: சட்டசபையில் தாயகம் கவி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: