பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி


சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கீழாண்டை மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப் (28). இவர் சென்னை ஆவடி வீராபுரத்தில் பட்டாலியன் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து பைக்கில் வாலாஜா நோக்கி சென்றார்.

கொடைக்கல் பால் பண்ணை அருகே உள்ள வளைவில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த சாலை குறியீடு கம்பம் மற்றும் அங்கிருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த திலீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொண்ட பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி appeared first on Dinakaran.

Related Stories: