தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து சேதத்தை கணக்கிட உயர்நிலை குழு அமைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம், பால் மனோஜ் பாண்டியன், பி.அய்யப்பன், வைத்திலிங்கம் மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோர் கவன ஈர்ப்பு அறிவிப்பை கொடுத்திருந்தனர். சட்டசபையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நேற்று பால் மனோஜ் பாண்டியன் பேசினார். அவர், இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அதனால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பீடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில் வருமாறு: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டாலும், வெப்பத்தின் தாக்கம் உள்ளதால் சேதம் முழுவதுமாக மதிப்பிட முடியவில்லை. தீவிபத்து குறித்து ஆய்வு செய்து சேதங்களை மதிப்பீடு செய்யவும், சீரமைக்க ஆகும் காலத்தை மதிப்பிடவும் இதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாதிருக்க பரிந்துரைகளை அளிக்கவும் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

The post தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து சேதத்தை கணக்கிட உயர்நிலை குழு அமைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: