சென்னை: இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை என இந்து முன்னணி வதந்தி பரப்பி வருகிறது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்ததற்காக 2 ஆண்டுகளுக்கு முன் கடைக்கு சீல் என வதந்தி பரவியது. பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பிரியாணி ஜிகாத் என்ற ஹேஷ்டேக்குடன் 2023ல் தகவல் பரவியது. இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பிய 9 பேர் மீது அப்போதே போலீஸ் வழக்கு பதிவு செய்தது என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
The post இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.