* வேளாண்மை-உழவர் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும், ஆலோசனைகளையும், தரமான வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்று பயனடைய ஏதுவாக 7 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.25 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
* ரசாயன உரங்களின் தரத்தினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருநெல்வேலி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படும்.
* வேளாண் விளைபொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்து சேமிப்பு காலத்தை நீட்டிக்கும் வகையில் திசையன்விளை, மானாமதுரையில் குளிர்பதன கிடங்கு வசதிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* வேளாண்மை பொறியியல் துறையின் இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வேளாண் இயந்திர கூடாரங்கள் 15 வட்டாரங்களில் ரூ.3.30 கோடி செலவில் அமைக்கப்படும்.
* விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தரக்கட்டுப்பாடு பிரிவு ஏற்படுத்தப்படும்.
* தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் தென்னையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் குறித்த 100 விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* மா மரங்களின் உற்பத்தி திறனை அதிகரித்து, மா விவசாயிகள் பயன்பெறும் வகையில் மா மரங்களில் கவாத்து செய்வது குறித்த செயல்விளக்க விழிப்புணர்வு பயிற்சி 500 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
The post ரூ.25 கோடியில் 7 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.