நன்றி குங்குமம் தோழி
கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தித்திக்கும் கரும்பு போல் வாழ்க்கையும் இன்பமாக அமைய வேண்டும் என்பதன் குறியீடுதான் கரும்பு. அது வாழ்க்கையை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்பது தெரியுமா..? அதில் பல மகத்துவம் நிறைந்துள்ளது. அவற்றை தெரிந்து கொள்ளலாம்.
*கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம் நம் வயிற்றை சமன் செய்வதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது.
*கல்லீரல் நன்கு செயல்புரிய கரும்புச்சாறு துணைபுரிகிறது. உடனடி உடம்பிற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
*சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ள பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது அருமருந்து.
*உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி, உடலில் படிந்துள்ள நச்சுத்தன்மையை அகற்றுகிறது. உடல் எடை குறைய வழிவகுக்கிறது. வைட்டமின் ‘சி’ இதில் அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப் புண் குணமாக உதவி புரிகிறது.
*வைரஸ்கள், பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர் பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும் இருக்கிறது.
*பற்கள் சேதமடைந்து, வலிமையிழந்து இருப்பவர்கள் தொடர்ந்து கரும்புச் சாறு அருந்தி வந்தால் பற்கள் வலிமை பெறும்.
*மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள துணைநிற்கிறது.
*உடல் எரிச்சலை சரிசெய்கிறது. உடல் சூட்டைக் குறைக்கிறது.
தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
The post கரும்பின் மகத்துவம் appeared first on Dinakaran.