ஜெயங்கொண்டம், ஏப்.2: கார்த்திகையை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் நேற்று சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஒவ்வொரு கார்த்திகையை முன்னிட்டும் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல தற்போது கார்த்திகையை முன்னிட்டுசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானனக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் முடிந்தவுடன் ஆராதனை நடத்தப்பட்டது.முருகபெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
The post ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.