சீரமைப்பு, நீர் நிரப்புதல், சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீச்சல் பயிற்சி முகாம்: 8ம் தேதி தொடங்கும்

பெரம்பலூர், ஏப். 2: நீச்சல் குளத்தில் சீரமைப்புப் பணிகள், நீர்நிரப்பும் பணிகள், சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீந்தக் கற்றுக் கொள்” திட்டத்தின் கீழ் நீச்சல் பயிற்சி முகாம் வரும் 8ம் தேதி தொடங்கும் என்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலுள்ள நீச்சல் குளம் பொதுமக்கள் பயன் பாட்டிற்காகவும், நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் குளத்தில், ”நீந்த கற்றுக்கொள்” திட்டத்தின் கீழ் (Learn to Swim Course ) 2025ம் ஆண்டிற்கான சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சிமுகாம் 13 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.இதில், முதல் வகுப்பு (Batch) ஏப்ரல் 1முதல் 13ம் தேதி முடிய, 2வது வகுப்பு ஏப்ரல் (Batch) 15முதல் 27ம் தேதி முடிய, 3வது வகுப்பு (Batch) 29 முதல் மே மாதம் 11ம் முடிய, 4வது வகுப்பு (Batch) மே மாதம் 13 முதல் 25ம் தேதி முடிய, 5வது வகுப்பு (Batch) மே மாதம் 27 முதல், ஜூன்மாதம் 8ம்தேதி முடிய நடைபெறவுள்ளது என பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நீச்சல் குளத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ் பழைய தண்ணீரை வெளி யேற்றுதல், வெல்டிங், கிளீனிங் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளும், புதிதாக நீர் நிரப்பும் பணிக ளும், நிரப்பிய நீரை சுத்தி கரிக்கும் பணிகளும் நடை பெற்று வருவதால் இப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு வரும் 8 ம்தேதி முதல் நீச்சல் பயிற்சிமுகாம் நடைபெறும்.

இந்தப் பயிற்சி முகாம் காலை நேரங்களில் 6 மணி முதல் 7மணி வரை, 7.15 மணி முதல் 8.15 மணி வரை மற்றும் 8.30 முதல் 9.30 வரையும், மாலை நேரங்களில் 3.30 மணி முதல் 4.30 மணி வரை, 4.30 மணி முதல் 5.30 மணி வரை மற்றும் 5.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.1,500 & (GST 18%) ஆகும்.பயிற்சி முகாமில் கலந்துகொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த நீச்சல் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குள வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04328-299266 என்ற தொலைபேசி எண், 74017 03516 என்ற அலைபேசி எண் அல்லது நீச்சல் பயிற்றுநர் (88704 39645) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post சீரமைப்பு, நீர் நிரப்புதல், சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீச்சல் பயிற்சி முகாம்: 8ம் தேதி தொடங்கும் appeared first on Dinakaran.

Related Stories: