அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் மீள்திறன் குறைந்த மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

பெரம்பலூர், ஏப். 2: அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் மீள்திறன் குறைந்த மாணவ, மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்த முன் வர வேண்டும் என்று பெரம்பலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் மாவட்ட க்கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (1ம் தேதி) பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப் படும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சிவிகி தம் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவ ட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடை பெற்றது.

குறிப்பாக 2023-2024ம் கல்வியாண்டில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளான வி.களத்தூர், கொளக்கா நத்தம், காரை, குன்னம், கீழப்புலியூர், அரும்பாவூர் பசும்பலூர், பாடாலூர், நக்கசேலம் செட்டிக்குளம், எளம்பலூர், பேரளி, கீழப் புலியூர், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளி, அரசு உயர் நிலைப்பள்ளிகளான கொளத்தூர், காடூர், நன்னை, அசூர், லாடபுரம், தெரணி, தொண்டைமாந் துறை, அரசு ஆதிதிராவிடர் நல உநி.பள்ளிகள் ஆலாம் பாடி, பொம்மனப்பாடி, ஈச்ச ம்பட்டி ஆகிய பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள், ஆசிரியர்க ளின் கற்பித்தல் உத்திகள் சார்ந்தும் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், 12 ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திலும், 10 ம்வகுப்பில் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடத்திலும் அதிகப் படியான மாணவர்கள் தேர்ச்சி பெறாததற்கான காரணங்கள், மாணவர்கள் தேர்ச்சியை அதிகப்படுத்த என்னென்ன நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும்.என்பது தொடர்பாக அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களு டன் விரிவாக ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கூறியதாவது, அரசு பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் முதல் கல்வி கற்பித்தல் வரை முழு மையாக இலவசமாகவும், தரமாகவும் வழங்கப் படுவதை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பெற் றோர்கள், மாணவர்களிடம் எடுத்துரைத்து நடப்பு கல்வியாண்டில் அதிக அளவில் மாணவ மாணவி யர் சேர்க்கைகளை அதிகப் படுத்திட வேண்டும்.அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஆய்வு செய்து மீள்திறன் குறைந்த மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்திட முன்வரவேண்டும்.

மேலும் வரும் 2025-2026 ம் கல்வி ஆண்டில்அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், இடைநின்ற மாணவர்கள் இல்லாமல் அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வர வைத்தல் மற்றும் 2024-2025 ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகி தத்தினை அதிகப்படுத்து தல் வேண்டும். மேலும் தற்பொழுது கோடைகால விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள், புதிய கட்டிடப் பணிகள் மற்றும் இதரப் பணிகளை பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து, பள்ளி வளாகங்களை பாது காப்பாகவும், தூய்மையாகவும் மேற் கொள்ளவேண்டும் என்று தொடர் புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்க ளுக்கு முதன்மை கல்விஅலு வலர் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் முருகம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை) செல்வக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அய்யா சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (மெட்ரிக் பள்ளி) லதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் மீள்திறன் குறைந்த மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: