பள்ளிப்பட்டு, ஏப்.2: பள்ளிப்பட்டு ஒன்றியம் கொல்லாலகுப்பம், பாண்ட்றவேடு, கேசவராஜிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இருளர் சமுதாய மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் கொல்லாலகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியில் 109 இருளர் சமுதாய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதில், தொடர்ச்சியாக பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் தேர்வு செய்து முதல் தவணையாக 35 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.5.10 லட்சம் மதிப்பில் தளம் போட்ட வீடுகள் கட்டுமான பணிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று வெங்கடேசபுரத்தில் நடைபெற்றது. இதில், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு தளம் போட்ட வீடு கட்டும் பணிக்காக பணி ஆணை வழங்கினார்.
தொடர்ந்து, வீடுகள் கட்டும் பணியினை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது, இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ள 100 பயனாளிகளுக்கும் இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலைகள், மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
முன்னதாக, பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில், திருத்தணி எம்எல்ஏவை இருளர் சமுதாய மக்கள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு பேரூர் திமுக பொறுப்பாளர் செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தண்டபாணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துரெட்டி, நிர்வாகிகள் செங்கையா, சந்துரு, மீசை வெங்கடேசன், கருணாமூர்த்தி, தாமு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post இருளர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணி: எஸ்.சந்திரன் எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.