மாதவரம், ஏப். 2: அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகரன் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறுகையில், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக அனைத்து கூட்டமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூலி தொழிலாளர்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி வழங்கப்பட்டது என்றார்.
The post கோயம்பேட்டில் அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் appeared first on Dinakaran.