இதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் ஹர்தீப்பும் அவரது நண்பர் தரம்பாலும், ஜகதீப் வீட்டிற்கு சென்று கடுமையாக தாக்கி அவரது கைகளையும் கால்களையும் கட்டினர். சத்தம் போடாமல் இருக்க வேண்டி அவரது வாயில் டேப்பை போட்டு கட்டினார். பின்னர் ரோஹ்தக்கிலிருந்து 61 கி.மீ தொலைவில் உள்ள சர்கி தாத்ரியின் பாண்டவாஸ் கிராமத்திற்கு காரில் கடத்தி சென்று வயலில் 7 அடி ஆழத்திற்கு குழி தோண்டினர். பின்னர் ஜகதீப்பை உயிருடன் மண்ணில் புதைத்தனர். தற்போது 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஜகதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.
The post மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த யோகா ஆசிரியரை உயிருடன் குழி தோண்டி புதைத்த கணவர் appeared first on Dinakaran.