புதுடெல்லி: தமிழ்நாடு கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றியவர் பொன்.மாணிக்கவேல், இவர் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரை கைது செய்தார். அந்த தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருவள்ளூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாட்ஷா மற்றும் கோயம்பேடு சிறப்பு துணை ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து தீனதயாளனை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கவே தன் மீது பொய் வழக்கை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்துள்ளார். எனவே இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காதர் பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதை எதிர்த்து காதர் பாட்ஷா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதையடுத்து, பொன்மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை நீங்கியது.
The post பொன்மாணிக்கவேல் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.