எடியூரப்பா மகனுக்கு எதிராக போர்க்கொடி கர்நாடக பாஜ எம்எல்ஏ 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்: கட்சி தலைமை நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திராவுக்கு எதிராக முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும் விஜயபுரா தொகுதி எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் யத்னால் போர்க்கொடி தூக்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக சில பாஜ தலைவர்கள் உள்ளனர். இதனிடையில் யத்னால் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாஜ மேலிட தலைவர்களிடம் விஜயேந்திரா புகார் கொடுத்ததுடன் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். இந்நிலையில் கட்சிக்கு விரோதமாக செயல்படுவது தொடர்பாக பாஜ ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு யத்னாலுக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் பதில் கொடுக்காமல் தவிர்த்தார். பின் மூன்றாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியும் பதில் தரவில்லை. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஒழுங்கு நடவடிக்கை குழு யத்னாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதை ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் செயலாளர் ஓம் படாக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதுடன், இதற்கான கடிதத்தை யத்னாலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

The post எடியூரப்பா மகனுக்கு எதிராக போர்க்கொடி கர்நாடக பாஜ எம்எல்ஏ 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்: கட்சி தலைமை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: