ரூ.6,900 கோடியில் பீரங்கி வாங்க 2 தனியாருடன் ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தான், சீன எல்லைகளில் நிலைநிறுத்துவதற்காக ஏடிஏஜிஎஸ் பீரங்கிகளையும், அதற்கான இழுவை வாகனங்களையும் வாங்க கடந்த வாரம் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ரூ.6,900 கோடியில் ஏடிஏஜிஎஸ் பீரங்கிகளையும், அதன் இழுவை வாகனங்களையும் உற்பத்தி செய்து வழங்க பாரத் போர்ஜ் லிமிடெட் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் தனது முதல் எப்-404 இன்ஜினை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. எம்கே-1ஏ வகை தேஜஸ் போர் விமானங்களில் இந்த சக்திவாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. மொத்தம் 99 இன்ஜின்கள் அமெரிக்க நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது. முதல் இன்ஜின் அடுத்த மாதம் எச்ஏஎல் நிறுவனத்திற்கு கிடைக்கப் பெறும். கடந்த 2021ல் பாதுகாப்பு அமைச்சகம் 83 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை தயாரிக்க எச்ஏஎல்லுடன் ஒப்பந்தம் செய்தது. எப்-404 இன்ஜின் சப்ளை தாமதமானதால் இதுவரையிலும் ஒரு விமானம் கூட முடித்து தரப்படவில்லை.

The post ரூ.6,900 கோடியில் பீரங்கி வாங்க 2 தனியாருடன் ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: