எம்.பி.க்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,24 லட்சமாக உயர்வு: நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.1,24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு அளிக்கப்படும் படியும் ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியமும் ரூ.31,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியம் முன் தேதியிட்டு 2023 ஏப்ரல்.1 முதல் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மாத சம்பளம், தொகுதி பணிக்கான படி, அலுவலகத்துக்கான செலவு உள்பட ஒரு எம்.பி.க்கு ரூ.2.54 லட்சம் கிடைக்கும் என்றும் தெரிவித்தது.

The post எம்.பி.க்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,24 லட்சமாக உயர்வு: நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: