திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் ராப் பாடகர் வேடன் மீது வழக்குப்பதிவு: பெண் டாக்டர் புகாரில் போலீஸ் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஹிரண்தாஸ் முரளி(29). பிரபல ராப் இசை பாடகர். இவர் ராப்பர் வேடன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவரது தாய் இலங்கையை சேர்ந்தவர் . இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். ராப்பர் வேடனுக்கு கேரளாவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. வேடன் தன்னை திருமணம் செய்வதாக கூறி 2 வருடமாக கொச்சி, கோழிக்கோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கோட்டயத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், ராப்பர் வேடனுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார்.

கடந்த 2021ம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் ராப்பர் வேடனுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் திருமணம் செய்வதாக கூறி 2021 ஆகஸ்ட் முதல் 2023 மார்ச் வரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் பெண் டாக்டர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ராப்பர் வேடன் மீது கொச்சி திருக்காக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகார் அளித்துள்ள இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னரே வழக்கு பதிவு செய்துள்ளதாக திருக்காக்கரை உதவி கமிஷனர் ஷிஜு தெரிவித்தார்.

The post திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் ராப் பாடகர் வேடன் மீது வழக்குப்பதிவு: பெண் டாக்டர் புகாரில் போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: