அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், உலகளவில் தொழில் செய்து வருகிறது. இந்தியாவில் இதன் நிறுவனம் பெங்களூருவில் அமைந்துள்ளது. இதில் சுமார் 7,000 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், இந்திய போயிங் நிறுவனத்தில் இருந்து 180 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொருளாதார ரீதியாக உலகளவில் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் போயிங் நிறுவனம் கடந்த ஆண்டில் தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது.
இதன்படி இந்தியாவில் 180 ஊழியர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது குறித்து போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சில ஊழியர்கள் நீக்கப்பட்டாலும், புதிய பதவிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்கள், அரசாங்க ஒப்பபந்தங்களில் பாதகம் ஏற்படாத வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக போயிங் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
The post உலகளவில் ஆட்குறைப்பு இந்தியாவில் 180 ஊழியரை டிஸ்மிஸ் செய்தது போயிங் appeared first on Dinakaran.