ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை

ராமநாதபுரம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இன்று காலை நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் இன்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமன்றி மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் குவிந்தனர். வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆட்டுக் கிடாய்கள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். இங்கு சுமார் ரூ.1 கோடி வரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல, பரமக்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், சாயல்குடி, ஒப்பிலான், வாலிநோக்கம், ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, தேவிப்பட்டிணம், பெரியபட்டிணம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆடு, கோழி விற்பனை களைகட்டியுள்ளது.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: