அமைச்சர் சக்கரபாணி : தமிழ்நாட்டில் மொத்தம் 2.29 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. திமுக ஆட்சி அமைந்த பிறகு 18,09,607 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கோரிய 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
அமைச்சர் பெரியகருப்பன் :பேராவூரணி தொகுதி கொளக்குடி ஊராட்சியில் உள்ள முழுநேர ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேஷன் கடைகளில், 6218 கடைகள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் : சக்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடியில் காச நோய்க்கான பெரிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த பின் 1300 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. 2,656 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு, நாய் கடிக்கு மருந்து இருப்பு அதிகமாக உள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் : திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படும். திருப்பூர் வடக்கு தொகுதியில் 5 கால்நடை மருந்தகங்களும் 2 கிளை நிலையங்களும் செயல்படுகின்றன. திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 7 கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் சேவை வழங்கப்படுகின்றன.
அமைச்சர் கே.என்.நேரு : மதுரை திருமங்கலத்தில் புதிய பெரிய பேருந்து நிலையம் கட்டித் தரப்படும். திருமங்கலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவில் முடிவடையும். நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் 100 வேலை திட்டத்தை தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மாநகராட்சி திருமண மண்டபங்கள் புதிதாக, பழமையான திருமண மண்டபங்கள் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
The post விரைவில் புதிய குடும்ப அட்டைகள், ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம், காச நோய்க்கான பெரிய கட்டிடம் : பேரவையில் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்!! appeared first on Dinakaran.