லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ். அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க… போதை போலீஸ்காரர் வீடியோ வைரல்

திருப்பூர்: லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்பெக்டர் அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க என போதையில் போலீஸ்காரர் பேசும் வீடியோ திருப்பூரில் வைரலாகி வருகிறது. திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் முத்துசாமி. இவர், தன் முன்னால் மதுபாட்டில்கள் சிகரெட் பெட்டி, தண்ணீர் பாட்டில்கள் வைத்துக்கொண்டுபோதையில் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது: நான், நேற்று டூட்டியில் இருக்கும்போது ஒரு 100 கால் அட்டன் செய்து அந்த பிரச்னையை சரி செய்தேன். இப்போது என் மனைவியை காணவில்லை, அதனால் மது அருந்தி கொண்டுள்ளேன். என் மகள் நன்றாக படித்து மெடல் வாங்கியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் போய் சொன்னேன்.

லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்பெக்டர் அம்மா எதுக்கு ஆப்சென்ட் போட்டாங்கனு எனக்கு தெரியலை ஐயா. நேரா போய் ஜே.எம்.4 பார்க்க போகிறேன். அவர பார்க்கவா; இல்ல எங்க ஏரியா கவுன்சிலர பார்க்கவா; என நீங்களே சொல்லுங்க ஐயா… இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார். மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு எனது மனைவி, மகள்கள் கிடைத்துவிட்டார்கள் எனவும், எனது மனைவியை கோபத்தில் அடித்துவிடுவேன் என்பதற்காக என் அத்தை என் வீட்டில் உள்ளார்கள் எனவும் பேசியதும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது, திருப்பூர் காவல் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ். அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க… போதை போலீஸ்காரர் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: