இக் கருத்தரங்கு தொடர்பாக டாக்டர் அனந்தராமன் கூறியதாவது: 40 முதல் 69 வயது பிரிவில் நிகழும் இறப்புகளுள் 45 சதவீதம் இதயநாள நோய்களால் ஏற்படுகிறது. மிக அதிகமான இதயநோய் சுமைகள் உள்ள உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இதயநோய், உடற்பருமன், நீரிழிவு மற்றும் பிற பாதிப்புகள் இயல்பாகவே அதிகம் ஏற்படக்கூடிய நபர்களாக இந்திய மக்கள் கொண்டிருக்கின்றனர். மரபுவழி இதயநோய் தொடக்கத்தில் எந்த அடையாளங்களையோ அல்லது அறிகுறிகளையோ வெளிப்படுத்துவதில்லை என்பதால், பல நேரங்களில் அலட்சியமாக விடப்படுகிறது.
இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இந்த ஆபத்தை / இடர்வாய்ப்பை சரிவர நிர்வகிக்கவும், சமாளிக்கவும் இயலும். இளவயது நபர்களில் இதயம் சார்ந்த இடர்வாய்ப்புகள் குறித்து இந்த நவீன யுகத்திலும் விழிப்புணர்வு கணிசமாக குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக திடீர் இதயச் செயலிழப்பால் ஏற்படும் இறப்பு குறித்து விழிப்புணர்வு பலருக்கும் குறைவாகவே இருக்கிறது. கார்டியோஜெனிடிக்ஸ் (மரபியல் சார்ந்த இதய நோய்கள்) பிரிவானது அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட நபரில் காணப்படும் மரபியல் மாற்றத்தை அடையாளம் காணவும் மற்றும் அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கான ஸ்க்ரீனிங் சோதனையை செய்யவும், அடுத்த தலைமுறை வரிசைமுறைப்படுத்தல் வசதி கிடைப்பது இந்தியாவில் மரபியல் சோதனையை எளிதில் கிடைக்கப்பெறுவதாக மாற்றியிருக்கிறது. இந்நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இக்கருத்தரங்கு ஒரு நல்ல செயல்தளமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
The post காவேரி மருத்துவமனை சார்பில் இதயவியல் நிபுணர்கள் பங்கேற்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் appeared first on Dinakaran.