ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தந்தை மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையாரின் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதானின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். தர்மேந்திர பிரதானுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான காலத்தை கடக்க அவருக்கு வலிமை கிடைக்கட்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தந்தை மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: