ஐபிஎல் போட்டிக்கு சென்னையில் டிக்கெட் விற்பனை துவக்கம்

சென்னை: ஐபிஎல் போட்டியின் 18வது தொடர் இம்மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடர்ந்து நடைபெறும் 2வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மார்ச் 23ம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை புதன்கிழமை காலை 10.15மணிக்கு தொடங்குகிறது.

டிக்கெட்களை www.chennaisuperkings.com என்ற சிஎஸ்கே இணைய தளம் மூலமாக மட்டுமே வாங்க முடியும். ஒருவர் அதிகபட்சமாக 2 டிக்கெட்கள் மட்டுமே வாங்க முடியும். ரசிகர்களுக்கான வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் போது தெரிந்து கொள்ளலாம். டிக்கெட்கள் முறையே 1700, 2500, 3500, 4000, 7500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

The post ஐபிஎல் போட்டிக்கு சென்னையில் டிக்கெட் விற்பனை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: