அங்கு பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இதனை ரோகித் சர்மா எப்படி சமாளிக்க போகிறார் என்ற வழியை அவர் கண்டுபிடிக்க வேண்டும். ரோகித்தின் கேப்டன்ஷி பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். இந்தியா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக விளையாடுவதில்லை. எனவே இங்கிலாந்து தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். இதேபோன்று இங்கிலாந்து தொடரில் ரிஷப் பன்ட் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து பந்துக்கும் பேட்டை சுற்றக்கூடாது. மனதளவில் களத்தில் நின்று நான் பந்தை எதிர்கொள்வேன் என்று பன்ட் நினைக்க வேண்டும். போதிய திறமை இருக்கிறது.
ஆனால் அணிக்காக அவர்கள் நான் இருக்கிறேன் என்று எழுந்து நிற்க வேண்டும். விராட் கோஹ்லி, ஜெய்ஸ்வால் தவிர மற்ற எந்த வீரரின் சராசரியும் வெளிநாடுகளில் 40 கூட தாண்டவில்லை. ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், உங்கள் பேட்டிங் வரிசையில் முதல் 6 வீரர்களின் சராசரி குறைந்தபட்சம் ஐம்பதையாவது தொட்டு இருக்க வேண்டும். வெளிநாடுகளில் விளையாடும் போது 250, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியாது. குறைந்தபட்சம் ஒவ்வொரு இன்னிங்சிலும் 400, 500 ரன்கள் அடிக்க வேண்டும். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
The post டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் பொறுப்பை உணர்ந்து ஆடவேண்டும்: கங்குலி அட்வைஸ் appeared first on Dinakaran.