திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை


திருச்செந்தூர்: வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட 2.5 அடி நீளமுடைய சிறிய ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஆமை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். தகவலறிந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர் ஜான் சிவராஜா, இறந்த ஆமையை திருச்செந்தூர் அரசு கால்நடை துறை மருத்துவமனையில் ஒப்படைத்தார். அங்கு மருத்துவர் அருண் உள்ளிட்ட குழுவினர் ஆமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆமை ஆலிவ் ரெட்லி வகை ஆமை, திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும் என மருத்துவர் தெரிவித்தார்.

தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிபட்டு அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயங்கள் ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது. ஏற்கனவே திருச்செந்தூர் கடற்கரையில் சிறியவை, பெரியவை என சுமார் 4 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை appeared first on Dinakaran.

Related Stories: