ம.பி. அமைச்சருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காண்ட்வா: மத்தியபிரதேச பழங்குடியினர் விவகார அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மத்தியபிரதேச பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சராக குன்வர் விஜய் ஷா பதவி வகித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த வியாழக்கிழமை(13ம் தேதி) ஒரு தகவல் வந்தது. அதில் அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை அவதூறான வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்து, அவருக்கு கொலை மிரட்டலும் விடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஹர்சுத் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட முகேஷ் தர்பார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post ம.பி. அமைச்சருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: