திருவனந்தபுரம்: லித்வேனியா நாட்டைச் சேர்ந்தவர் அலெக்சேஜ் பெசியோகோவ் (46). இவரும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிராசெர்தா என்பவரும் சேர்ந்து அமெரிக்காவில் கிரிப்டோ கரன்சி, போதைப்பொருள் விற்பனை, குழந்தைகள் விபச்சாரம், ஆபாச வீடியோ, ஹேக்கிங் ஆகியவை மூலம் 1.60 லட்சம் கோடி சம்பாதித்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததும் அலெக்சேஜ் பெசியகோவ் கேரளா தப்பி வந்துவிட்டார். திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவில் போலீசார் கைது செய்தனர். நேற்று டெல்லி சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
The post சர்வதேச குற்றவாளி சிபிஐயிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.