விசா ரத்து செய்யப்பட்டதையடுத்து ரஞ்சனி சீனிவாசன் அமெரிக்காவில் இருந்து வெளியேற முடிவு செய்தார். அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பின் ஆப் மூலம் விண்ணப்பித்து அந்த நாட்டில் இருந்து தாமே வெளியேறி உள்ளார். இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டி நோயம் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,’அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு கிடைப்பது ஒரு பாக்கியம். ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது அந்த சலுகை ரத்து செய்யப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திற்குள் ரஞ்சனி சீனிவாசன் நுழையும் வீடியோவையும் கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.
The post ஹமாஸை ஆதரித்ததால் விசா ரத்து அமெரிக்காவை விட்டு தானாக வெளியேறிய இந்திய மாணவி: புதிய வீடியோ காட்சிகள் வெளியீடு appeared first on Dinakaran.