மீண்டும் பிற்பகல் 12.56 மணியளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8060க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,480க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை, அதுவும் 3 மணி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்த நிலையில் நேற்று விலை சற்று குறைந்தது. அதாவது நேற்று விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,030க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 240க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
The post தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.240 குறைந்தது appeared first on Dinakaran.