எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், மார்ச் 8: காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மேகதாது அணைகட்ட எத்தனை ஆயத்த பணிகளை முடித்து இருந்தாலும் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. ஒன்றிய அரசும் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அதனால் ஒன்றிய அரசு சட்டத்திற்கு புறம்பாக போகாது ஆகையால் சித்த ராமையா சொல்வது சட்டத்துக்கு புறம்பானது. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எது வேண்டுமானாலும் செய்யும். ஆனால் எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது. அந்தளவிற்கு விட்டுவிட மாட்டோம். சட்டம், நம் பக்கம் இருக்கிறது. நியாயமும் நம் பக்கம் இருக்கிறது என்றார். அப்போது ஒவ்வொரு மாநில மொழிக்கும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் தருவதாகவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ்மொழியில் வழங்க முதல்வர் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று அரக்கோணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் துரைமுருகன், ‘பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம். சொல்லுதல் யாவருக்கும் எளியனவாம்’ என பதிலளித்தார். அப்ேபாது, எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: