போடி அருகே பரபரப்பு சுத்தியலால் வாலிபர் மண்டை உடைப்பு: 3 பேர் கைது

 

போடி, ஜன. 10: தேனி மாவட்டம், போடி, சவுடம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் தினகரன்(24). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு போடி குப்பிநாயக்கன்பட்டியில் தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தினகரனின் நண்பர் அபிஷேக் என்பவரது உறவினரான கரிகாலனிடம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த சச்சின், ஜெயச்சந்திரன் (28), அருண்குமார் (27) ஆகிய 3 பேரும் தகராறில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த தினகரன் சண்டையை விலக்கிவிட முயன்றார். அப்போது சச்சின் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து தினகரனின் தலையில் தாக்கினார். மேலும், கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த தினகரன் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ குருகவுதம் வழக்குப்பதிவு செய்து சச்சின் உட்பட 3 பேரையும் கைது செய்தார்.

The post போடி அருகே பரபரப்பு சுத்தியலால் வாலிபர் மண்டை உடைப்பு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: