தரங்கம்பாடி,ஜன.10: தரங்கம்பாடி பகுதியில் சம்பா – தாளடி பயிர்களின் அறுவடை துவங்கி உள்ளது. எனவே அறுவடை இயந்திரத்திற்கு வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தில்லையாடி. திVருக்கடையூர், காழியப்பநல்லூர், எடுத்துகட்டி சாத்தனூர், திருக்களாச்சேரி, நல்லாடை, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கொடவிளாகம், கடலி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா -தாளடி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். இப்பொழுது அந்த பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் திருவிளையாட்டம், ஈச்சங்குடி, பகுதியில் அறுவடை பணியை துவங்கியுள்ளனர். சம்பா தாளடி பயிர் முழுமையும் அறுவடை இயந்திரத்தின் மூலமே அறுவடை செய்யபடுகிறது. இதற்காக ஏராளமான அறுவடை இயந்திரங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கலெக்டர் விவசாயிகள் மற்றும் அறுவடை இயந்திர உரிமையாளை்களை அழைத்து பேசி அறுவடை இயந்திரத்திற்கான வாடகை குறித்து முடிவு செய்து அதை விவசாயிகளுக்கு அறிவிக்கபடும். இந்த ஆண்டு இதுவரை அறுவடை இயந்திரத்தின் வாடகை குறித்து எந்த முடிவும் எடுக்கபடாததால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக விவசாய பிரதிநிதிகள், அறுவடை இயந்திர உரிமையாளர்களை அழைத்து பேசி அறுவடை இயந்திரத்தின் வாடகையை விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தரங்கம்பாடி பகுதியில் சம்பா தாளடி அறுவடை தீவிரம் அறுவடை இயந்திரத்திற்கு வாடகை நிர்ணயிக்க வேண்டும் appeared first on Dinakaran.