வேதாரண்யம்,ஜன.10: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை ஊராட்சியில் பொங்கல் தொகுப்புகளை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய மும்மத்தினரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். கோடியக்கரை மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆண்டு தோறும் அனைவரும் சமத்துவ பொங்கலை நூற்றுக்கணக்கான இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து அனைவரும் பொங்கல் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் அன்றைய தினம் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பாக கொண்டாட தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருள்கள் அரிசி, சீனி, முழு கரும்பு மற்றும் வேட்டி சேலையை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர். பொங்கல் தொகுப்பு பரிசை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் அனந்த ராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோடியக்கரையில் உள்ள 650 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினர். கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் தொகுப்பை வாங்கி சென்றனர்.
The post வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.