×

சட்ட விரோதமாக மது விற்பனை: 3 வாலிபர்கள் உட்பட 4 பேர் கைது

 

ஈரோடு, ஜன. 10: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தொடர்ந்து ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இதில், நேற்று முன்தினம் மேற்கொண்ட ரோந்தில் டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக, சிறுவலூரில் சிவகிரியை சோ்ந்த இளங்கோ (40), பு.புளியம்பட்டியில் சென்னையை சேர்ந்த சுகன் (25), ஆசனூர் செக்போஸ்டில் கோவையை சேர்ந்த சசிக்குமார் (28), சிவலூரில் அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 56 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

The post சட்ட விரோதமாக மது விற்பனை: 3 வாலிபர்கள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Tasmak ,
× RELATED ஈரோடு அருகே உரிய ஆவணங்கள் இன்றி...