போச்சம்பள்ளி, ஜன.10: போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் வேளாண்மை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடைபெற்றது. போச்சம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான மத்தூர், பாரூர், சந்தூர், நாகரசம்பட்டி, காவேரிப்பட்டணம் உள்பட தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியிலிருந்து கொப்பரை உற்பத்தியாளர்கள் திரளாக பங்கேற்றனர். இதில் கொப்பரை கிலோ அதிகபட்சமாக ₹146.80 வரை ஏலம் போனது. கடந்த காலங்களில் கிலோ ₹120 முதல் ₹130 வரை விற்பனயைானது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகை முதல், தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. தேங்காய் விலையை தொடர்ந்து, கொப்பரை விலையும் அதிகரித்து வருவதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post கொப்பரை விலை உயர்வு appeared first on Dinakaran.